இந்திய தேர்தல் ஆணையம்

சென்னை,

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 15-வது சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதனிடையே  தமிழக அரசியல் களம் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.   மாவட்ட வாரியாக தொகுதிகளை தேர்வு செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது என அரசியல் கட்சிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் 24-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம்.

பிப்ரவரி 24 முதல் மார்ச் 5-ம் தேதி வரை தினமும்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

விருப்ப மனுவுக்கு தமிழ்நாட்டில் ரூ.15,000, புதுச்சேரியில் ரூ.5000, கேரளாவில் ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தரலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் விருப்ப மனு விநியோகம் தேதியை அதிமுக முன்கூட்டியே அறிவித்துள்ளது நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் – ரசூல் முஹைதீன்

தமிழ்மலர் மின்னிதழ்