ஃபாஸ்ட் டேக் கட்டாயம்
பிப்ரவரி 15/16 நள்ளிரவு முதல் ஃபாஸ்ட் டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் எந்தவொரு வாகனமும் இரட்டிப்பாக கட்டணம் செலுத்த நேரிடும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 16 ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட் டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதும், ஃபாஸ்ட் டேக் பொருத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.
நிருபர் ஶ்ரீசரவணகுமார்.
செய்திகள் தமிழ்மலர்.