திக் பலம் சூட்சமங்கள்

திக் பலம் சூட்சமங்கள்

கிரஹங்களின் பலத்தை கணக்கிடும்போது முதலில் ஸ்தான பலம் அதனையடுத்து
திக் பலனை பார்க்கவேண்டும்.
திக் பலமானது கிரஹங்களின் திசை வலிமையை குறிக்கும். திசையானது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகியவற்றை குறிக்கும்.

ராகு கேதுக்களை தவிர்த்து மற்ற அணைத்து கிரஹங்களும் குறிப்பிட்ட திசையில் வலிமை அடைகிறது. திசை என்பது லக்கினத்தை அடிப்படையாக வைத்தே அமையும். அதாவது நாம் பிறக்கும் லக்கினம் எதுவோ அது கிழக்கு திசையை குறிக்கும். லக்கினத்திற்கு நான்காம் இடம் தெற்கு திசையும், ஏழாம் இடம் மேற்கு திசையும், பத்தாம் இடம் வடக்கு திசையும் குறிக்கும்.

லக்கினத்தில்
குரு மற்றும் புதன்,
நான்காம் இடத்தில்
சந்திரன், சுக்கிரன்
ஏழாம் இடத்தில் சனி
பத்தாம் இடத்தில்
சூரியன் செவ்வாய்
திக் பலத்தை பெறுவார்கள்.

ஒரு கிரகம் ஸ்தான பலம் இழந்தாலும் அக்கிரகம் திக் பலம் பெற்றிருந்தால் அந்த கிரகம் வலிமையாக இருக்கின்றது என்று அர்த்தம்.

ஸ்தான பலம் என்பது கிரகம் நேர்வலு அடையும். திக் பலம் என்பது நேர்வலு இல்லாமல் மறைமுக வலு அடைகிறது. எடுத்துக்காட்டாக இயற்கை பாப கிரகமான சனி நேர்வலு அடையும்போது அக்கிரகம் அதனுடைய காரகத்துவமான அழுக்கு, அடிமைதொழில், மெக்கானிக், கடைநிலை ஊழியர், நீண்ட ஆயுள் கொடுக்கக்கூடியவர்.
அதே சனி நேர்வலுவற்று மறைமுக வலுகூடி அதாவது நீசமாகி சுப கிரக பார்வை அல்லது திக் பலம் பெறுவதோ அல்லது வர்கோத்தமம் பெறுவது அந்த ஜாதகருக்கு நல்ல பலன் தரும்.

சரி, திக் பலம் பெற்ற கிரகம் எவ்வாறு பலன் தரும் ?

எடுத்துக்காட்டாக குரு திக் பலம் அடைத்தது என்றால் குரு ஆனவர் ஒன்றாம் வீட்டின் திசை அதாவது கிழக்கு திசை மூலமாக நன்மை செய்வார். எந்த கிரகம் ஆனாலும் அந்த கிரகம் திக் பலம் அடையும் வீட்டின் நடுப்பகுதி 15″ degree முழு திக் பலம் அடையும்.

எடுத்துக்காட்டாக அதிகாலையில் சூரியன் கிழக்கு திசையில் உதிக்கும் பொழுது குரு மற்றும் புதன் திக் பலம் அடையும் பொழுது அதனுடைய காரகத்துவமான கல்வி, ஞானம், புத்திகூர்மை ஆகியவை அதிகளவில் பூமியில் மனிதர்களுக்கு கிடைக்கும்.

அதே போல் சனி ஒரு இருள் கிரகம் அதனால் சூரியன் மேற்கு திசை அதாவது மாலை நேரம் முழு பலம் அடையும்.
ஒரு கிரகம் திக் பலம் அடையுமானால் அதனுடைய காரகத்துவம் வலு பெறும்.

ஒரு கிரகம் திக் பலம் அடையும் இடத்துக்கு நேர் எதிர் வீட்டில் பலம் இழக்கும்.

ஜோதிட ஆய்வில்
Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்