விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். நேரு அரங்கிற்கு வந்த பிரதமர் மோடியை துணை முதல்வர் ஓபிஎஸ்சும் முதல்வர் பழனிசாமியும் பொன்னாடை போற்றி வரவேற்றனர். அவருக்கு சிலை ஒன்றையும் பரிசாக வழங்கினர். பின்னர் நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்குமாறு முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
அதன் படி, சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். ரூ.3,370 கோடியில் முடிந்த மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க சேவையையும் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.290 கோடி மதிப்பில் சென்னை கடற்கரையில் இருந்து அத்திக்கடவு வரையிலான ரயில்வே பணிகளையும் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பிரதமர் மோடி உறுதுணையாக இருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி துவக்கி வைக்கும் அனைத்து திட்டங்களும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார், இதனிடையே, ரூ.100 கோடி மதிப்பில் சென்னை ஐஐடியில் கட்டப்படவிருக்கும் கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்