மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மக்களை நோக்கி நடைபயணம்..
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 13/02/21 சோழிங்கநல்லூர் தொகுதியில் மேடவாக்கம், சித்தால பாக்கம் . பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதிகளில் மக்களை நோக்கி நடைபயணம் செய்தனர். இந்த நடைபயணத்தின் போது சித்தாலபாக்கம் பெரூம்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுயில் அக்கட்சியின் கொடிகள் ஏற்றப்பட்டன. இந்த நடைபயணத்தை மாவட்ட செயலாளர் ராஜிவ்குமார் தலைமை தாங்கினார். மற்றும் ஒன்றிய செயலாளர் மய்யம் மணிமாரன், நகர செயலாளர் omr சங்கர், பெரும்பாக்கம் ஊராட்சி செயலாளர் S குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். மற்றும் மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர். இந்த நடைபயணம் காலை 7.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு முடிவடைந்தது.
மக்கள் இடையே மாபெரும் வரவேற்பு கிடைத்ததாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
S குமார்
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.