தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தகவல்!
திருச்சி திமுக மாநாடு தள்ளிப் போகிறது என்ற தகவல் தீயாக பரவி வரும் நிலையில், “ஐபேக் டீமுக்கும், எங்களுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை” என திருச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் வரும் பிப்ரவரி மாதம் 21 -ம் தேதி அன்று திருச்சி – பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை இடையே உள்ள சிறுகனூரில் பிரமாண்டமான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு வழக்கமான மாநாட்டைக் காட்டியிலும் மாறுபட்டது என கண்சிமிட்டுகின்னர் விவரம் அறிந்தவர்கள்.
அதாவது கடந்த காலங்களில் தேர்தலை யொட்டி நடைபெறும் திமுக மாநாட்டில், அதன் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை அழைத்து கௌவுரப்படுத்தும் வகையில் இருக்கும்.
இதனால், கூட்டணித் தலைவர்கள் மனம் குளிர்ந்து திமுக கூட்டணியில் சீட்டே வேண்டாம், இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவர். ஆட்சிக்கு வந்த பின்னர் ஏதாவது பெரிய அளவில் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்பர்.
தற்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த நிலையில், திமுக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி, தமிழக வாழ்வுரிமைக்கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இந்திய ஜனநாயக்கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், திமுக தலைமை முன்பு ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, திருச்சி அடுத்துள்ள சிறுகனூரில் நடைபெறும் மாநாட்டில் திமுகவினர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது கூட்டணி கட்சியினரையும் அழைகக் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தேர்தலை மையப்படுத்தி தான் இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஆனால், திருச்சி மாநாடு தள்ளிப் போகிறது என்ற தகவல் தீயாக பரவி வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு “ஐபேக் டீமுக்கும், எங்களுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை” என்றும், திருச்சி மாநாடு தள்ளிப் போகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் திமுக வை வெற்றிப் பெற வைக்கவே ஐபேக் டீம் பாடுபடுகின்றனர் என்றும் திருச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்