பிஸ்கட்டு

சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும். க்ரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயணங்களால் ஆனது.

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைக்கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள்.

பாலமுருகன் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ்மலர் மின்னிதழ்