நல்ல மருந்து!நாட்டு மருந்து – தொடர் -23

நல்ல மருந்து…!  நம்ம நாட்டு மருந்து…!

அறுசுவைகளில் ஒன்று உப்பு உப்பிட்டவரை உள்ளவரை நினை என்பார்கள்.

அதுபோல் நமது உடலுக்கு இன்றியமையாத கால்சியம் எனும் உப்பு இன்றியமையாத சுவைகளில் ஒன்று.

உப்பு புளிப்பு இவை இரண்டையும் நமது நாக்கில் பட்டாலே உயிர்ச்சத்து எனும் பிராண நீர் உற்பத்தியாகும் அதாவது உமிழ்நீரை தான் பிராண நீர் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்…. என்பதை சிலோடையாக கூறுவது இதைத்தான்.

 கால்சியம் எனும் உப்புச் சத்துதான் நமது அறிவு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது, அதாவது மூளையின் எழுச்சி அல்லது அறிவின் அபிவிருத்தி என்ற உணர்வுகளை தூண்டுவது கால்சியம் தான்.

பொதுவாக அறிவு மந்தமாக அல்லது தவறுதலாக யாராவது ஒருவர் ஒரு செயலை செய்தால் அல்லது பேசினால்…? அவரை நம்மில் சிலர் இவ்வாறாக சொல்வார்கள் “நீ சோத்துல (சாப்பாட்டில்) உப்பு போட்டு தானே சாப்பிடுகிறாய்” என்று கேட்பது ஒரு வழக்கு மொழியாக இன்றும் உள்ளது.

மேலும் உப்பு காம உணர்ச்சியை தூண்டும், காம உணர்ச்சி அதிகரித்தால் விந்து விரயம் ஆகிறது, விந்து விரயம் ஆகினால் உடல் நலக்கேடு உருவாகிறது அதாவது நரம்புத்தளர்ச்சி எனும் கொடுமையான நோய் உருவாகிறது, மேலும் காம உணர்வு அதிகமாக இருப்பவனுக்கு கடுமையான அதிகமான  கோபம் இயல்பாக உருவாகி விடுகிறது, அதன் காரணமாக அந்த கோபமானது வெறிபிடித்த ஆத்திரக்காரனாக மாற்றிவிடுகிறது.

அந்த ஆத்திரம் பலவிதமான படுபதக பால் காரியங்கள் மற்றும் கண்மூடித்தனமான தவறுகளை செய்ய தூண்டும், தவறுகள் செய்கின்ற காரணத்தால் சட்டம்-ஒழுங்கை மீறி விடுகிறான், அதன் காரணமாக நீதிமன்றத்தின் தண்டனைக்கு உள்ளாவார்கள்.

இதைத்தான் “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” “விந்து விட்டவன் நொந்து கெடுவான்” என்று நமது முன்னோர்கள் பழமொழியில் குறிப்பிட்டுள்ளனர்.

அறிவை வளர்ப்பது போல் உப்புச்சத்து எலும்பு வளர்ப்பதிலும் துணைபுரிகிறது, அது கால்சியம் எனும் உப்புச்சத்து நம்மிடம் அதிகரிக்கும் போது ஏற்பட்ட உணர்வுகளையும் நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம் மேலும் உப்பு உடலில் அதிகமானால் சளிப்பு, அதீதமான மூத்திரம் அல்லது சிறுநீர், காசநோய், இதனால் அடிக்கடி காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

உப்புச்சத்து சரிவர இருந்தால் நமது உடலில் இருக்கும் உஷ்ணமான 98.4 டிகிரி ஃபாரன்ஹீட் சரி வர இருக்கும், உப்புச்சத்து அதிகமானாலும் குறைந்தாலும் நமது உடல் உஷ்ணம் மாறுபட்டு கெட்டு காய்ச்சலை உருவாக்கிவிடும்.

 இதன் காரணமாக பல தொற்று நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது எனவே உப்பு அளவுடன் இருப்பது தப்பு அல்ல என்பது தான் சித்தர்கள் கூறும் அறிவுரை மேலும் உப்புச்சத்து உள்ள உணவு பொருட்கள் எது என்று பார்ப்போம்.

முளைக்கீரை, வாழைத்தண்டு, கீரைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, பூசணிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், முள்ளங்கிக்கீரை, கோஸ் கீரை, நெல்லிக்காய், உப்பு, தனியா எனும் கொத்தமல்லி, சோடா, வில்வ இலை, மணத்தக்காளிக் கீரை, வெங்காயம், மஞ்சள் பூசணி, நுங்கு, இளநீர், பால், ஆப்பிள், திராட்சை, அன்னாசிப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற 27 உணவுப் பொருட்கள் என்று குறிப்பிட்டுள்ளனர் மருத்துவர்கள்.

அடுத்ததாக அறுசுவைகளில் ஒன்று துவர்ப்பு… உப்பு சுவை போலவே துவர்ப்பு சுவையும் ஒரே நேர்கட்டில் நட்புடன் நமது உடலை பேணி காக்கிறது உப்பைப் போலவே துவர்ப்பு சுவை அதிகமானாலும் குறைந்தாலும் ஒரே விளைவையும், பயனையும், தருகிறது.

ரத்த உற்பத்திக்கு துவர்ப்பும் பெரும் பங்களிப்பு ஆற்றுகிறது, ரத்தத்தைப் பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியத்தை கணக்கிட முடிகிறது.

துவர்ப்பு சுவையுடைய உணவு பொருட்களில்… வாழைப்பூ, வாழைத் பிஞ்சு, அத்திக்காய், மாவடு, விளாங்காய், புளியங்கொட்டை, கடுக்காய், பீட்ரூட், வெற்றிலைப்பாக்கு, வெந்தயம், மாதுளை, பருப்பு வகைகள், எலுமிச்சம் பழம், பேரிச்சம் பழம், மாம்பழம், போன்ற 15 வகையான உணவுப் பொருள்கள் என்று மருத்துவ குறிப்புகளில் பதிவு செய்துள்ளதுள்ளனர்.

அதுபோல அறுஞ்சுவைகளில் ஒன்று காரம்…! காரம் உப்பு, புளிப்பு சுவைகளை போல் நாவில் பட்ட உடனே உயிர் சக்தியான உமிழ்நீரை அதிகமாக சுரக்கச் செய்கிறது.

காரம் ஜீரண சக்திக்கு பயன்படுகிறது காரம் குறைந்தால் ஜீரண சக்தி குறையும், அதேபோல் காரம் அதிகமாக இருந்தால் வயிற்றுப்போக்கு அதிகமாகி உடல் சோர்வை ஏற்படுத்தும்.

காரம் குறைந்தால் நாவறட்சி, மலச்சிக்கல், அஜீரணம், பசியின்மை, ருசியின்மை, மந்த பேதி, வயிற்று உப்புசம், போன்றவை உண்டாகி விடுகிறது, எனவே காரத்தையும் உப்பு, புளி, போன்று நாம் எடுத்துக் கொண்டால் தான் நமது உடல் உபாதைகள் இன்றி மிகவும் சரிவர இயங்க வாய்ப்பை பெறுகிறது.

காரச்சுவை மிகுந்துள்ள உணவுப் பொருள்கள்… அரைக்கீரை, சிறு கீரை, மிளகாய், கருணைக்கிழங்கு, மிளகு, இஞ்சி, சுக்கு, பொரி கடலை, கோதுமை, நச்சுக்கொட்டைக் கீரை, வேளைக்கீரை, கலவை கீரை… என 12 வகையான பொருள்கள் உள்ளதாக மருத்துவ குறிப்பு பதிவுகளில் உள்ளது.

எனவே அறுசுவைகளில் உள்ள அற்புதமான பயனுள்ள விபரக்குறிப்புகளை அறிந்து நாம் சரிவர உணவு உண்டு வந்தால் “நோயற்ற வாழ்வு வாழ்ந்து குறைவற்ற பெரும் செல்வத்தை இனிமையாக பெறுவோமாக”என்பதே இயற்கை நமக்கு கற்றுத் தந்த அருமையான பாடமாகும்..!

 எனவே நோய் வருமுன் காப்போம்…

 நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து….!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141119