நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

1969 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த அரிய சாதனைக்குரிய திரைப்படம்”தெய்வமகன்”.
இப்படம் பெங்காலி எழுத்தாளர் நிஹார் ரஞ்சன் குப்தா எழுதிய “உல்க்கா”என்ற நாவலைத் தழுவி,ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் ஆரூர்தாஸ் வசனத்தில் உருவான அமோக வெற்றி பெற்ற படமாகும்.
முதல் முறையாக ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் “தெய்வமகன்”.ஒஸ்கார் கமிட்டியினர் மூன்று வேடங்களிலும் நடித்தவர் ஒருவரே என்பதை கடைசிவரை நம்பவேயில்லை. பிறகு முழு விபரமும் அறிந்த பின் இப்படியும் ஓர் நடிகனா என சிவாஜி கணேசனை வியந்து பாராட்டினர்.

விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலக மகா நடிகன் சிவாஜி கணேசன் ஒருவரே…

செய்தி விக்னேஸ்வரன்