நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -22

நல்ல மருந்து…!  நம்ம நாட்டு மருந்து…! (22)

அறுசுவைகளில் பலரும் வெறுத்து ஒதுக்கும் சுவை கசப்பு.

ஆனால் இந்த கசப்பு சுவை நமது உடலிலுள்ள நாடி நரம்புகளை வலுப்படுத்துகிறது.

ஒருவர் சிறுவயதிலிருந்தே வேப்ப இலை போன்ற கசப்பு சுவையை சாப்பிட்டு வந்தால் அவருக்கு ஜந்துக்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது.

அதாவது பொதுவாக பாம்பு,சிலந்தி, தேள், போன்ற விஷ உயிரினங்கள் அவரைத் தீண்டினாலும் அவருக்கு விஷம் ஏறுவதில்லை.

அதேவேளையில் கசப்பு சுவை நமது உடலில் அதிகமாக இருந்தால் சொறி, சிரங்கு, உறக்கமின்மை, குஷ்டம் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

அதே நேரத்தில் நமது உடலில் கசப்பு சுவை குறைந்தால் சோம்பல், உடல்நலக் குறைவு, வாய்வுத் தொல்லை, நரம்பு தளர்ச்சி தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

கசப்பு சுவை குறைந்தவர்கள் சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம் காரணம் சூரிய ஒளியானது கசப்பு சுவை கொண்டது.

கசப்பு சுவையுடைய உணவு பொருட்கள் 26 என்று சித்த மருத்துவம் வகைப்படுத்தி கூறி உள்ளது அவைகள்.

சுண்டைக்காய், பாகற்காய், கத்தரிப்பிஞ்சு, முருங்கக்காய்,முருங்கைப்பூ, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை, குப்பைக் கீரை, தூதுவளை, கரிசலாங்கண்ணி, முசுமுசுக்கை இலை,  கறிவேப்பில்லை, பூண்டு, சீரகம், கடுகு,  துளசி, வேப்ப இலை, தினை, தேங்காய், மற்றும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வெற்றிலை, கம்பு, போன்றவற்றை கசப்பு சுவை மிகுந்துள்ளதாக சித்த மருத்துவம்குறிப்பிடுகின்றது.

கசப்பு சுவைக்கு அடுத்ததாக இனிப்பு இனிப்பு சுவையை உணவின் வழியாக நாம் எவ்வளவு உண்டாலும் அவை இறுதியாக சர்க்கரையக அதாவது குளுக்கோஸ் (Glucose) என்று ரத்தத்தில் கலக்கிறது.

இந்த குளுக்கோஸ் சக்தியை நமது உடலில் உள்ள தசைகளை வலிமை பெறச் காரணமாகியுள்ளது.

இதே குளுக்கோஸ் நமது உடலில் அதிகமாக இருந்தால் மலச்சிக்கலுடன் தசை பெருத்து அதாவது உடல் பருமனாகி ஊளைச்தசை என்பார்களே அது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இது ஆரோக்கியமான உடலுக்கு கேடுகளை விளைவிக்கும் அதுவே காலப்போக்கில் சர்க்கரை நோயாக கருதப்படுகிறது.

அறுசுவைகளில் ஒன்றான இனிப்புச் சுவையுடைய உணவுப்பொருட்கள் மொத்தம் பதினாறு என்று சித்த வைத்திய மருத்துவ குறிப்புகள் பதிவு செய்து வைத்துள்ளது.

அவைகள் வரிசையில் கற்கண்டு சர்க்கரை (அஸ்கா அல்லது சீனி) கருப்பட்டி, வெல்லம், கரும்பு, வாழைப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, கிர்ணி பழம், அன்னாசிப் பழம், பேரிச்சம் பழம், நாவல் பழம், இலந்தை பழம், சீத்தாப்பழம், மாதுளம்பழம், மஞ்சள் பூசணி, என்று வரிசைப்படுத்தி உள்ளது சித்த வைத்திய மருத்துவ குறிப்புகள்.

அடுத்ததாக புளிப்புச் சுவை புளிப்பு நமது உடலில் கொழுப்பை உருவாக்க உறுதுணையாக உள்ளது.

 அதிக புளிப்பு உடல் தினவை அதாவது திமிரையும், மதமதப்பையும் உண்டாக்குகிறது,கொங்குத் தமிழில் சொல்ல வேண்டு மென்றால் அதிகமான லொள்ளை உண்டாக்குகிறது.

இனிப்பு சுவை குறைவால் அல்லது அதிகமானல் என்னென்ன வியாதிகள் நமது உடலுக்கு ஏற்படுகிறதோ, அதே வியாதிகள் புளிப்பு சுவை குறைவாலும் அதிகமானாலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

சுருக்கமாக சொல்வதென்றால் இனிப்பும் புளிப்பும் இரட்டைக் குழந்தைகள் என்று கூட சொல்லலாம்.

பல் வலி, பல் சொத்தை, விரல் நகங்களில் சொத்தை, பல் அரிப்புடன் மலச்சிக்கல் உண்டாகிறது.

அதே நேரத்தில் நமது உடலில் புளிப்பு சுவை குறைவாக இருந்தால் உடல் இளைத்து காணப்படும், தூக்கம் குறைந்து காணப்படுவதோடு வாந்தி பேதி, உடல் சோர்வு போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

முப்பத்தி ஒன்பது வகையான உணவுப் பொருள்களில் புளிப்புச்சுவை மிகுதியாக உள்ளது என்று சித்த மருத்துவம் தொகுப்பு உள்ளது.

கடலை பட்டாணி, துவரம்பருப்பு, ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, புழுங்கல் அரிசி, பச்சரிசி, பழைய சோறு, அரிசி மாவு பண்டங்கள், பாதாம் முந்திரி பருப்பு, காராமணி, வேர்க்கடலை, மொச்சை பயறு, தயிர் மோர் வெண்ணை நெய் எருமைப்பால்,  பனங்கிழங்கு, சக்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய், அவரைக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், கொத்தவரங்காய், புளியங்காய், மாங்காய், சீமை தக்காளி, பசலைக்கீரை, பருப்புக்கீரை,  நார்த்தங்காய், பலாப்பழம், நாவல்பழம், வெள்ளரிப்பழம், முலாம்பழம்,மாம்பழம், ஆரஞ்சு, வாழைப் பழம், எலுமிச்சம்பழம், என சித்த வைத்தியம் வகைப்படுத்தி உள்ளது.

அறுசுவைகளில் முச்சுவைகளை இந்தப் பதிவில் பார்த்தோம் அடுத்த மூன்று சுவைகளையும் இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

எனவே நாம் நோய் வந்த பின் பார்க்கலாம் என்கின்ற கொள்கையை விட்டு விட்டு… நோய் வருமுன் காப்போம்..

நல்ல   (உணவு) மருந்து… நம்ம நாட்டு (உணவு) மருந்து  என்பதனை எப்போதும் நினைவில் நிறுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழ்வோமாக…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119