சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை தொடங்கலாம்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா வீரியம் அதிகமாக இருந்ததால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று, குறைந்து இருப்பதால் மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. விரைவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை தொடங்கலாம் என மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாநில அரசின் அனுமதியோடு, நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்கவும் சிபிஎஸ்இ அனுமதி வழங்கியுள்ளது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்