பெட்ரோல், டீசல் விலை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து 89.70 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 82.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 

இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 90 ரூபாயை நெருங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து ரூ.89.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.82.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

செய்தி ரசூல் நிருபர் தமிழ்மலர் மின்னிதழ்.