பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்..

மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு .வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி மாநிலங்களவையில்  குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு விரும்புகிறது. விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என விரிவான விவாதம் செய்து இருந்தால் நன்றக இருந்திருகும். விவசாய பிரச்சினைகள் குறித்து பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்து விடுகின்றனர்.

விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் தேவை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். 

விவசாயிகள் நலன் குறித்து தொடர்ந்து சிந்தித்து நடவடிக்கைள் எடுத்து வருகிறோம். குறைந்த பட்ச ஆதார விலை இருந்தது. இப்போதும் இருக்கிறது, இனிவரும் காலங்களிலும் இருக்கும்.

வேளாண் சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதுவே சரியான தருணம். வேளாண் சட்டங்களில் குறைகள் இருந்தால் நிச்சயமாக சரி செய்யப்படும். 

ஏழைகளுக்கான குறைந்த விலை ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடரும். வேளாண் கொள்முதல் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி ரஹ்மான்