தங்கப்பல் கேட்டிருப்பீங்க.. தங்க நாக்கு தெரியுமா..

தங்கப்பல் கேட்டிருப்பீங்க.. தங்க நாக்கு தெரியுமா.. எகிப்தில் மம்மி வைத்திருந்த தங்க நாக்கு!

எகிப்தில் நடத்தப்பட்ட ஒரு தொல்லியல் ஆய்வில் தங்க நாக்குடன் கூடிய மம்மி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

அவற்றுடன் வெட்டப்பட்ட பாறையில் அமைக்கப்பட்ட 16 கல்லறைகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுடன், தங்க நாக்குடன் கூடிய மம்மி ஒன்றையும் கண்டுபிடித்தனர்.

சும்மா 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய மம்மி என கண்டுபிடித்துள்ள அவர்கள் தங்க நாக்கு எதற்காக வைக்கப்பட்டிருக்கும் என்பது குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் ரோம் மற்றும் கிரேக்க கலாச்சாரம் நிலவி வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தியாளர்
அப்துல் ரஜாக்