கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபட…

நாடு கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபட போராடும் வேளையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராடுகிறார்கள்.

தலைநகர் டெல்லியின் எல்லைகளை கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி முதல் விவசாயிகள் முற்றுகையிட்டு நடத்தி வருகிற இந்த போராட்டம், சர்வதேச அளவில் கவனத்தை கவர்ந்ததுடன், நாடாளுமன்றத்திலும் புயலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த தருணத்தில், 6-ந் தேதி (நேற்று) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில், டெல்லியிலும், நாட்டின் பிற இடங்களிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், விவசாயிகள் நேற்று நடத்திய போராட்டத்தின்போது, பயன்படுத்திய கொடி தொடர்பாக சர்ச்சை ஏழுந்துள்ளது.

பஞ்சாப்பின் லூதியானாவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது ஒரு டிராக்டரில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பிந்த்ரன்வாலே தோற்றத்தை போன்ற் ஒரு கொடி ஒன்று பறந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தடை செய்யப்பட்டிருந்தவற்றை காட்டியிருந்தால் தவறு என பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சீந்திர மத பிரிவான தம்தாமி தக்சலின் தலைவராக பிந்த்ரான்வாலே இருந்தார். அவர் ஒரு இந்திய இராணுவ ஜெனரலாக இருந்தார், அவர் 1984 ஆம் ஆண்டில் காலிஸ்தான் இயக்கத்தில் சேர்ந்தார், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஓய்வு பெறுவதற்கு சற்று முன்னர் ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி ரசூல்