முதல்வர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு..

தமிழக அரசு ஊழியர்களுக்கு
முதல்வர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் விதமாக புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.. தமிழக அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள் சொந்த வீடு கட்ட அல்லது வாங்க, அரசு சார்பில் வழங்கப்படும் முன்பணம் ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

இதே போல் பல்வேறு கோரிக்கைகளை எதிர்த்து போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான் பல்வேறு வழக்குகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்த்தும் வகையில் மற்றொரு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான கோப்புகள் முதல்வரிடம் ஏற்கனவே சென்றுவிட்டதாகவும், விரைவில் அதில் அவர் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-ஆக இருந்த நிலையில், அது கொரோனா காலத்தில் 59-ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இது 60-ஆக உயர்த்தப்பட உள்ளது.. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், ஓய்வூதியம் பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு சுமார் ரூ. 10,000 கோடி செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.