வீரமாமுனிவர்”அவர்களுடைய 274 வது நினைவஞ்சலி தினம்.

தமிழ் மொழிக்கு ஓளியேற்றிய பெருந்தொகை “வீரமாமுனிவர்”அவர்களுடைய 274 வது நினைவஞ்சலி தினம் இன்றாகும்.

திருக்குறள்,தேவாரம்,திருப்புகழ்,நன்னூல், ஆத்திச்சசூடி போன்ற நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர்.கான்ஸ்டன்டைன் ஜோசப் என்பது இவரின் இயற்பெயர். கிறிஸ்துவத்தை இந்திய மண்ணில் பரப்புவதற்காக பாரதம் வந்தவர் இவர்.
அதற்காக இந்திய மொழிகளை கற்க ஆரம்பித்தவருக்கு தமிழ் மொழியின் மீது தீராக்காதல் ஏற்பட்டது. “தைரியநாதசாமி”
என தனது பெயரை மாற்றியவர்,அது வடமொழிச் சொல் என அறிந்த பின் சுத்தத்தமிழில் “வீரமாமுனிவர்”என மாற்றிக்கொண்டு தமிழில் 23 நூல்களை இயற்றினார். கிறிஸ்துவத்தை “தேம்பாவணி”என எழுதினார்.
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்து சிறப்பித்தார்.தேவாரம்,திருப்புகழ்,
நன்னூல்,ஆத்திச்சசூடி போன்றவைகளை ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்த்து கீர்த்தி பெறச் செய்தார்.ஓலைச் சுவடிகளைத் தேடியலைந்ததால் “கூவடிச் சாமியார் “எனவும் நாமம் கொண்டார்.தொல்காப்பிய காலத்திலிருந்த பல வழக்கு முறைகளை மாற்றியமைத்து தமிழ் மொழியின் எழுத்துகளை 18ம் நூற்றாண்டில் காலத்திற்கேப வடிவமைத்தார்.
அம்மகானுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் சிலையமைத்துள்ளனர்.
தமிழ் மொழியின் சிறப்புகளை இவ்வையம் உணரச்செய்தவரின்
அரும்பணி பணியை போற்றி “வீரமாமுனிவரின்”நினைவஞ்சலி தினத்தில் அப்பெருந்தகையை நினைவு கூர்வோமாக…
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளைஇலங்கை.