வங்கி அதிரடி அறிவிப்பு?

ஏடிஎம் கார்டு OTP
தேவையில்லை
வங்கி அதிரடி அறிவிப்பு?

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தங்களின் வரவு செலவுகளை மிகப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வங்கிக் கணக்கு பயன்படுகிறது. தங்களின் தேவைக்கு ஏற்றவாறு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவும், எடுப்பதற்கும் மக்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு வங்கி கணக்கு வைத்துள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏடிஎம் வைத்திருக்கின்றனர். தங்களின் தேவைக்கு பணம் தேவைப்படும்போது வங்கிக்கு செல்லாமல் ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

அதன்படி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி கார்டு மற்றும் ஓடிபி தேவைப்படாது. அதாவது ஏடிஎம்மில் க்யூ ஆர் குறியீடு பட்டனை கிளிக் செய்து, யோனோ லைட் செயலி மூலம் அந்த க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இது குறைந்தபட்ச தொடர்பு கொண்டது என்றும் தெரிவித்துள்ளது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்