மீன்வளத் துறை எச்சரிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்?

சூறைக்காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கடல் பகுதி ஏராளமான மீனவர்கள் சென்று மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் சூறாவளி காற்று மற்றும் அதிக மழை காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும். அந்த சமயங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள். இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சூறைக்காற்று வீசுவதால் மறு உத்தரவு வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்