சிலிண்டர் விலை உயர்வு..

சிலிண்டர் விலை உயர்வு.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது 191 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 1,654.50 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணம் செய்து வருகிறது. அதபோல, வீடு மற்றும் வணிகம் நோக்கம் கொண்ட சிலிண்டர் விலையையும் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையும் விநியோகம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் வீட்டு சிலிண்டர் 710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது

ஆனால், ஜனவரி மாதம் 1,463.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, தற்போது 191 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு சிலிண்டர் விலை 1,654.50 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடிக்கடி சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், டீ கடை, ஹோட்டல் கடை உள்ளிட்ட வணிகர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்