ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆவேன்!

ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆவேன்!
தேமுதிக துணைச் செயலாளர்
எல்.கே.சுதீஷ்!

வேலூர் என்னோட சொந்த மாவட்டம் . அதனால்தான் வேலூர் மாவட்டத்தின் மீதுதான் எனக்கு அதிகர் ஆர்வம். தலைவர் விருப்பப்பட்டதால் மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டேன். வரும் தேர்தலில் தலைவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆம்பூர் தொகுதியில் நீங்கள் என்னை பார்க்கலாம் என்று தெரிவித்தார் தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ்.

ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை
எல்.கே சுதீஷ். தெரிவித்தார்.

அதாவது, தான் ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆவேன் என்பதை அப்படி சூசகமாக தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக சட்டமன்ற தொகுதிகளை 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 7 மண்டலங்களில் வேலூர் மண்டலத்திற்கு நான் தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.