எவோட்ஸ்-2021 கலை,கலாசார போட்டி
புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலை,கலாசார போட்டித்தொடரின் கவிதை போட்டிக்கான பரிசளிப்பு கடந்த சனியன்று (30.01.2021) கொழும்பில் இல் அமைந்துள்ள கிளாரட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. கலைஞர் ஊடகவியலாளர் ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்பரிசை எம். நிரோஷன் இலக்கிய புரவலர் ஹசிம் உமரிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும், இரண்டாம் பரிசை தியத்தலாவை எச் எப்.றிஸ்னா , சமூக சேவையாளர் மற்றும் நமது தமிழ்மலர் இலங்கை தலைமை செய்தி ஆசிரியர் இம்ரான் நெய்னாரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொள்வதையும், முன்றாம் பரிசை செல்வி.ஆர்.சுவஸ்திகா பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம்.
(படங்கள்-ஓவியன்)

