ராயப்பேட்டை மாநகராட்சியின் சிறப்பான பணிகள்….

சென்னை : ராயப்பேட்டை மண்டலம் 9, வார்டு 115 பகுதிக்கு உட்பட்ட ஷேக் தாவூத் தெருவில் கடந்த சில தினங்களாக சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து சாலை முழுவதும் தேங்கி நின்றது.

இதனை அந்த பகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி AE அனந்தராமன் அவர்களுக்கு தமிழ்மலர் மின்னிதழ் மீடியா செய்தியாளர் முலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் வந்தவுடன் AE அனந்தராமன் அவருடன் பணிபுரியும் ஊழியர் ராஜாராம் அவரை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பி கால்வாய் அடைப்பு எடுக்குமாறு உத்தரவிட்டார்.

சென்னை மாநகராட்சி AE உத்தரவின் பேரில் ஊழியர் ராஜாராம் முன்னிலையில் மற்ற ஊழியர்களின் உதவியோடு கால்வாய் அடைப்பு கழிவு நீர் வண்டியின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்த சென்னை மாநகராட்சி AE அனந்தராமன் மற்றும் ஊழியர் ராஜாராம் ஆகியோர்க்கு தமிழ் மலர் மின்னிதழ் மீடியா சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அப்துல் ரஜாக்
செய்தியாளர்
தமிழ்மலர் மின்னிதழ்