போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழகத்தில் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறு கிறது. 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக 43 ஆயிரம் மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங் கள், சோதனைச் சாவடிகளிலும் சொட்டு மருந்து வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைதூர பகுதிகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இப்பணியில் சுகாதாரப் பணி யாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள், ஆசிரியர்கள், தன்னார் வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்களும் ஈடு படுத்தப்படவுள்ளன
தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத் துவர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் போலியோ சொட்டு மருந்து முகா மில், தமிழகத்தில் உள்ள 5 வய துக்குட்பட்ட 70.20 லட்சம் குழந்தை களுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து வழங்கப்படும் குழந்தை களுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படவுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந் தாலும் முகாம் நாளில் மீண்டும் கண்டிப்பாக சொட்டு மருந்து வழங் கப்பட வேண்டும். சில தினங் களுக்கு முன்பு பிறந்த குழந்தை களுக்கும் முகாம் நாளில் சொட்டு மருந்து கொடுப்பது அவசிய மாகும்.
சென்னை மாநகரில் சுமார் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதற்காக 1,644 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. 6,700 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இப்பணிகளின்போது தகுந்த கொரோனா தொற்று நெறிமுறைகள் மற்றும் வழிக்காட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்