நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

[7:20 PM, 1/30/2021] Vigneshwaran: 1972 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்த வெற்றி படமாகிய “ஞான ஒளி”படம், நாடகமாக பல தடவைகள் மேடையேறி வெற்றி கண்டது.நாடத்தில் மேஜர் சுந்தரராஜன் நடித்த என்டனி,அருண் வேடத்தை திரையில் சிவாஜி கணேசன் செய்தார்.இந்நாடகம் “லெஸ் மிசரபெல்ஸ்”என்ற பெயரில் 1862 இல் ,பிஃரான்ஸ் நாட்டு ( பெரீஸ்) எழுத்தாளர்,கவிஞர் விக்டர் ஹுயூஹோ நாவலாக எழுதியது.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உயிரோட்டமான நடிப்பில் இத்திரைப்படம் அமோக வெற்றி பெற்று அவ்வாண்டின்(1972) சிறந்த நடிகராக சிவாஜிக்கு பிஃலிம்பேஃர் விருது கிடைக்கச் செய்தது.இப்படத்தில் இடம்பெற்ற “தேவனே என்னைப் பாருங்கள் “பாடலில் வரும் வசனங்களை சிவாஜியையே பேச வைக்க முடிவு செய்தார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.இப்பாடலை டி.எம்.சௌந்தரராஜன் உச்சஸ்த்தாயியில் பாடியிருந்தார். அந்த வேகத்தில் என்னால் வசனம் பேச முடியாது என்றார் சிவாஜி .எனவே முதலில் தன் உதவியாளர் ஜோசப் கிருஷ்ணாவையும்,பின் சதனையும் பேச வைத்தார்.பாடலுக்கேற்ற அம்சம் கிடைக்கவில்லை. அதன் பின் சிவாஜியை பேச வைத்து டி.எம்.சௌந்தரராஜன் நன்கு உள்வாங்கிக் கொண்டு அவரே பேசிப் பாடினார். இப்படத்தின் வெற்றிக்கு இப்பாடல் மிகவும் உறுதுணையாக இருந்தது. பிறகு இப்படம் ஹிந்தியில் “தேவதா”என்றும்,தெலுங்கில் “சக்ரவர்த்தி “என்றும் வெளியானது.இப்படத்தில் சிவாஜியின் நடிப்பையும்,டி.எம்.சௌந்தரராஜனின் பாடலையும் பெரிதாக ரசித்து,சென்னை சாந்தோம் சர்ச் பாதிரியார் பாராட்டியதாக
அக்காலத்தில் பத்திரிக்கைகளில் செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நாடத்தை மேஜர் சுந்தரராஜன் மேடையில் நடிக்கும் போது சிவாஜி கணேசன் பல தடவைகள் பார்த்தார்.இதை கவனித்த மேஜர் சுந்தரராஜன் காரணம் கேட்டதற்கு சிவாஜி கூறிய பதில்,சினிமாவில் இப்பாத்திரத்தில் நான் நடிக்கும் போது உன்னுடைய பாணி எனக்கு வந்து விடக்கூடாது என்றார். சிவாஜிக்கு தொழிலில் இருந்த அக்கறைக்கு இந்நிகழ்வை உதாரணமாக கூறலாம். குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி வெற்றி கண்ட
“ஞான ஒளி”சிவாஜிக்கும்,வியட்நாம் வீடு சுந்தரத்திற்கும் வெற்றித்திருவொளியே..

Vigneshwaran: ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளைஇலங்கை