ஜியோ அதிரடி அறிவிப்பு..
ஜியோ வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க நிறுவனம் அதிரடி அறிவிப்பு?
மோசடி செய்திகளில் ஜாக்கிரதையாக இருக்கவும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஜியோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
உங்கள் KYC ஐப் புதுப்பிக்க ஏதாவது எண்ணை அழைக்கும்படியோ அல்லது இலவச மொபைல் டேட்டா தருவதாக வரும் மோசடி செய்திகளில் ஜாக்கிரதையாக இருக்கவும். இந்த செய்திகளில் கொடுக்கப்பட்ட எந்த எண்ணையும் அழைக்க வேண்டாம் அல்லது லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். தெரியாத / சந்தேகத்திற்கிடமான எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளது
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்