போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்?
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், கொரோனா காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக சேலம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவி சுதா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்