திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் _ ஆன்லைன் மருந்து வணிகம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் _ ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க மத்திய அரசு முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது.
சென்னை,
ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி மருந்தக உரிமையாளர்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் மருந்து வணிகத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். ஆன்லைன் மருந்து வழங்கும் முறை சமுதாய சீரழிவிற்கும், இளைஞர்கள் எதிர்காலத்திற்கும் மிகுந்த ஆபத்து விளைவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2 கோடி பேருக்கும் அதிகமானோர் மருந்து வணிகத்தை நம்பியிருக்கிறார்கள். எனவே ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கும் வகையில் சட்டமியற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் ரஹ்மான்