சர்வதேச விமானங்களுக்கு பிப்-28 வரை தடை நீட்டிப்பு?மத்திய அரசு உத்தரவு?

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும்28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, அதே ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, கொரோனா பரவல் ஓரளவுக்கு குறையத் தொடங்கியதை அடுத்து, உள்ளூர் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சிலமாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டது. எனினும், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை நீக்கப்படவில்லை.

ஆனால், சில நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக ஒப்பந்தங்களின் அடிப்படையில், சர்வதேச விமானங்கள் மிகக்குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த தடையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்