ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்?

சென்னை: சென்னையில் மெரினா பீச் ரோடு காலியாக இருக்கிறது.. ஆனால் ஒருத்தர் மட்டும் வெள்ளை வேட்டி சட்டையுடன் வேகவேகமாக நடந்து சென்றதை பார்த்து போலீசாரே திகைத்து போய்விட்டனர்.

ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறக்கப்பட்ட அன்றே, சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் “நம்ம சென்னை” என்ற செல்ஃபி மையம் தமிழக அரசின் சார்பில் மெரினா பீச் பகுதியில் திறக்க ஏற்பாடானது..

ஜெ.மணி மண்டபம் முடித்த கையோடு, அந்த நிகழ்ச்சி நம்ம சென்னை செல்பி மையம் துவங்க இருந்தது.. ஆனால், அந்த இடம் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது.

அமைச்சர்கள்
இதுவும் தமிழக அரசு சார்பில் விழா என்பதாலும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
தான் இதையும் திறந்து வைக்க போகிறார் என்பதாலும், அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என திரண்டு வந்திருந்தனர்..

மேலும் இது முதல்வர் விழா என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

முதல்வர்!

சுற்றுவட்டார பகுதி முழுவதுமே போலீசார் பாதுகாப்புகாக நின்றிருந்தனர்.. அதனால் சந்தேகத்திற்கிடமான முறையில் யாருமே அங்கு நடமாடாத வகையில் கண்காணிப்பில் இருந்தனர்.. முதல்வர் அந்த பக்கமாக வரும் நேரமோ நெருங்கி கொண்டிருந்தது.. அப்போதுதான், ஒருவர் வேக வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்..

அமைச்சர்!

வெள்ளை கலர் டிரஸ்ஸில், இத்தனை பேர் பாதுகாப்புக்கு இருக்கும்போது, நடுரோட்டில் இப்படி வருவது யார் என்று போலீசார் மிரண்டு பார்த்தனர்.. அருகில் வந்ததும் உற்று பார்த்தபோதுதான், அது நம்ம அமைச்சர் ஜெயக்குமார் என்று தெரியவந்தது. இவர் ஏன், இப்படி நடந்து வர்றார், அதுவும் வேகமாக வருகிறார் என்று அருகில் சென்று போலீசார் விசாரித்துள்ளனர்.. ஏற்கனவே நடந்த நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்ததாம்… அதனால் அவர் காரை வெளியே எடுக்க முடியவில்லையாம்..

வாக்கிங்!

அதற்குள் விழா ஆரம்பித்துவிட போகிறார்கள் என்று நினைத்து, யாரையுமே எதிர்பார்க்காமல், அவர் பாட்டுக்கு நடந்து வர ஆரம்பித்து விட்டாராம்.. அதுவும் இல்லாமல் இப்படி வேக வேகமாக நடக்கிறது அமைச்சருக்கு ரொம்பவும் பிடிக்குமாம்.. வெயில்ல நடந்தால் இன்னும் நல்லதாம்.. அதான் இப்படி” என்று சொல்லி கொண்டே சிரித்தபடியே நகர்ந்தார். இவ்வளவு சிம்பிளாக அமைச்சர் இருக்கிறாரே என்று அங்கிருந்தோர் ஆச்சரியப்பட்டு போனார்கள்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்