பிப்ரவரி 28 வரை சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிப்பு.


 
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
 
புதுடெல்லி:

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே 25-ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

ஆனால், வழக்கமான சர்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டன.

இந்நிலையில், ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த சர்வதேச விமான சேவை ரத்து நடவடிக்கை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.