பா.ஜனதாவில் இணைந்தார் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்.

புதுச்சேரி:

புதுச்சேரி பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர் நமச்சிவாயம். ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான். இவர்கள் இருவரும் 26-ந் தேதி சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தனர்.

தற்போது அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இருவரும் பாஜக கட்சியில் இணைந்தனர்.

செய்தியாளர் ரஹ்மான்