புனர்பூ தோஷம் என்றால் என்ன?

ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது:

சனியும், சந்திரனும் சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது.

சனி வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சனியும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்து இருப்பது.

சனியின் நட்சத்திரத்தில் சந்திரனும் அல்லது சந்திரன் நட்சத்திரத்தில் சனியும் இருப்பது.

சனி மற்றும் சந்திரன் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது.

பொதுவாக கடக ராசிக் காரர்களுக்கு புனர்பூ தோஷம் என்பது இயல்பாகவே அமைந்து விடுகிறது.

புனர்பூ தோஷம் என்ன செய்யும்?

தம்பதிகளுக்குள் மனக் கசப்பையும் பிரிவையும் உண்டாக்கிவிடும்

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது வரன்களுக்கு ஜாதகத்தில் இந்த தோஷம் இருக்கிறதா என்று பாருங்கள்!

பரிகாரம்

முருகப் பெருமானை மனம் உருக வணங்குவதுதான் பரிகாரம்!

Astro Selvaraj Trichy
Cell : 9842457912