திருப்பம் தரும் தைபூச வழிபாடு
திருப்பம் தரும் தைபூச வழிபாடு
எதிர்வரும் 28.1.2021
தைமாதம் 15 ஆம் நாள் வியாழக் கிழமை நள்ளிரவு 1.35 மணி வரை பௌர்ணமி திதியும்,பின் இரவு 4.48 வரை பூச விண்மீனும்
கூடிய நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பல்வேறு முறைகளில் முருகனுக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.
மகர ராசியில் உள்ள சூரியனின் ஆற்றலை கடகத்தில் ஆட்சி பெற்ற சந்திரன் முழுமையாக பெற்று பௌர்ணமி ஆக ஒளிரும் இந்நன்னாளில்
மனக்காரன் சந்திரன் ஆட்சி பெற்று வலிமை பெறுவதால் இந்த நாளில் நாம் எண்ணும் காரியம் வெற்றி பெறும். நமது சிந்தை தெளியும்.
தனது தாயாரிடம் இருந்து சக்தி மிக்க வேலை முருகப் பெருமான் வாங்கிய நாளே தைபூச தினமாகும்.
வேண்டியதை கொடுக்கும் இத்திருநாளில் முருகப் பொருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் எந்த தடங்கலும் இன்றி உங்களின் வேலை சுபமாக முடியும்.
திருமண முயற்சியை மேற்கொள்ளவும்,
தொழில் துவங்கவும்,விஸ்தரிக்கவும்,
புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும்,
வீடு,மனை,வாகனம் வாங்க முயற்சிக்கவும்,
வேலைக்கு முயற்சிக்கவும்
தைப்பூச தினத்தன்று காலையில் உணவை நீக்கி விரதம் இருந்து
(முடிந்தவர்கள் காலை,மதியம் இருவேளை விரதம் எடுக்கலாம்)
9ன் மடங்குகளில் முருகனுக்கு உரிய
சஸ்திர பந்தம்,
வேற்குழவி வேட்கை,
சண்முக கவசம்,
கந்த ஷஷ்டி கவசம்,
குமாரஸ்தவம்
(ஏதோனும் ஒன்று)
பாராயனம் செய்து உங்கள் அருகிலுள்ள முருகனை கோவிலுக்கு சென்று உங்களுக்கு தேவையான ஓரு கோரிக்கையை முருகப் பெருமானிடம் வைத்து வழிபட்டால் நீங்கள் வேண்டிய அந்த காரியம் எந்த வித தடங்கலின்றி நடைபெறும்.
தொழில் வளம் பெறவும், வாழ்க்கையில் முன்னேற்றம் பெறவும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் இயற்றிய சஸ்திர பந்தத்தை 27 முறை பாராயணம் செய்து முருகனின் அருளைப் பெற்றிடுங்கள்.
இந்த பாடல் விந்தையானது. பின்புறமாக படித்தாலும் அதாவது கடைசியில் இருந்து படித்தாலும் ஒரே பாடலாக வரும்(விகடகவி போல).
இது வேல் பந்தம். வேலில் மந்திர எழுத்துக்களை இயந்திரமாக கொண்டு உருவாக்கப்பட்ட சக்தி மிக்கமந்திரம்.
இதை நாம் நாள் தோறும் பாராயணம் செய்து வந்தால் முருகனின் வேல் நம்மை காப்பது போல்
நமக்கு வரும் தீமைகளை அழித்து ஒரு கவசம் போல் நம்மை பாதுகாக்கும்.
நன்றி! எம் ஜி ஆர் மணி பெங்களூர்