S-6 சங்கர் நகர் காவல் துறை சார்பாக72-வது குடியரசு தின விழா!

இந்திய திருநாட்டின் 72- வது குடியரசு தினநாள் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் சங்கர் நகர் S-6
காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பறக்கத்துள்ளாஹ் அவர்கள் தலைமையில் குடியரசு தின நாளை முன்னிட்டு
காவலர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் தேசிய கொடியேற்றி கொண்டாடினார்கள். குடியரசு தின விழாவில் காவல் துணை ஆய்வாளர்கள், கருப்புசாமி மணிவண்ணன், செல்வமணி, மற்றும் காவல்துறை தனிப்பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டு இந்த குடியரசுத் திருநாளை இனிப்பு வழங்கி மிக சிறப்பாக கொண்டாடினார்கள்

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ் மலர் மின்னிதழ்