அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுக்காக முழு ரயில் புக்கிங் செய்தார்?
ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் மதுரையில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு ரயிலையே புக் செய்து தொண்டர்களுடன் சென்னை வந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் சென்னை மெரினா கடற்கரையில் இன்று திறக்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைக்க உள்ளனர்.
இந்நிலையில் மதுரை பகுதியில் இருந்து 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை தனி ரயில் மூலம் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த ரயிலானது நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து விழாவில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் இன்று மாலை 5மணிக்கு அதே ரயில் மூலமாக மதுரை செல்ல உள்ளனர்.
இந்த ரயிலில் தொண்டர்களோடு அமைச்சர் செல்லூர் ராஜூவும் பயணித்தார்.
1500 அதிமுகவினரோடு ஜெ.நினைவிட மண்டப திறப்புக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தொண்டர்களோடு தொண்டர்களாக பயணம் செய்ய உள்ளார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்