ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோயில் 38 ஆம் ஆண்டு பால்குட திருவிழா!

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நல்லதம்பி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோயில் 38 ஆம் ஆண்டு பால்குட திருவிழா
கோயில் நிர்வாக தலைவர்
ராமானுஜம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆலய குருக்கள் சிவாச்சாரியார் பாலு பிரதான குடத்தை மாட வீதி
வழியாக உலா வந்து ஆலயத்தை வந்தடைந்தார் பின்னர் ஸ்ரீ நாகவல்லி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது மற்றும் நிர்வாகத்தினர் முன்னிலையில் பால்குட திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் அனைவரும் தலையில் சுமந்து சென்று நாகவல்லி அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. பம்மல் சங்கர் நகர் S-6 காவல் ஆய்வாளர் பறக்கத்துள்ளாஹ் அவர்கள் தலைமையில் காவல் துணை ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்