தமிழ்நாடு இந்தியாவின் தலைநகராக இருக்க வேண்டும் சீமான் அதிரடி?

நாட்டின் வளர்ச்சிக்கு தலைநகரங்கள் முக்கியமானவை என்பதால், இந்தியாவின் 4 தலைநகரங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிற்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ஒரே நாடு, ஒரே தலைவர் என்னும் பாஜகவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

தலைநகரங்களைப் பரவலாக்குவதன் மூலமே வளர்ச்சியைக் கடைக்கோடியில் வசிக்கும் மக்கள் வரை கொண்டு செல்ல முடியும்.

அப்படி இருக்கையில், எல்லாவற்றிற்கும் டெல்லியைச் எதற்கு சார்ந்திருக்க வேண்டும்? அதனால்தான், இந்தியாவற்கு நான்கு தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என மே.வ. முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ள கருத்து சிறந்த கருத்தாகும். எனவே, அதனை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.

வளர்ச்சியை மையப்படுத்தியே தமிழ்நாட்டில் ஐந்து மாநிலத் தலைநகரங்கள் இருக்க வேண்டும் எனும் முழக்கத்தை முன்வைக்கிறோம். அதேபோல, இந்தியாவிற்கும் நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கருத்தை வழிமொழிகிறோம்.

அதிகாரப் பரவலாக்கலும், மாநிலங்களின் தன்னாட்சி உரிமை உள்ளிட்டவையே நாட்டின் ஒருமைப்பாட்டையும், தேசிய இனங்களின் சமத்துவத்தையும், நாட்டின் இறையாண்மையைக் காக்கும் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்