உலகப் பாவை – தொடர் – 24
25. மதவெறி மாற வேண்டும்
மதங்களுக்குள் ஒருமைப் பாடு மலராத போது, மண்ணில் மதங்களினால் ஒருமைப் பாடு மலருமெனல் வெறும்கூப் பாடு
மதநெறிகள் அனைத்தும்
இன்று
மதவெறியாய் மாறி, மாந்தர் வதைபடுதல் கண்ட பின்னும் மதம்பிடித்தே அலைவ தென்னோ?
உதவிக்கு வரல்போல் வந்தே உரியமதம் மாறச் செய்யும் மதவெறிப்பேய் உலவும் மட்டும் மதங்களெனல் ஒருமைக் கேடே!
மதவெறிகள் அற்ற காலம் மலர்ந்தொருமை பூக்க, இன்றே உதவும்நல் கொள்கை தந்தே உலாவருவாய் உலகப் பாவாய்!
[9:41 AM, 1/9/2021] Sha: https://tamilmalar.com/2021/01/09/உலகப்-பாவை-தொடர்-9/
திருக்குறள் தூயர் முனைவர்
கு.மோகனராசு