டீசல் விலை கடும் ஏற்றம்? சென்னையில் இன்று முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது?

சென்னையில் பல்வேறு வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வடிக்கால் வாரியம் மூலம் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுச்செல்லப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று(ஜன.25) முதல் இயக்கப்படும் 650 மாநகர ஒப்பந்தம் தண்ணீர் லாரிகள் இயக்கப்படாது என மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது டீசல் விலை கடும் ஏற்றம் அடைந்துள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

எனவே எங்களால் நஷ்டத்தில் லாரியை இயக்க முடியாது என மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகனங்களுக்கு சொந்தக்காரர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். கிடைக்கும் லாபத்தில் பாதிக்கும் மேல் டீசலுக்கே செலவாகிவிடுவதால், ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் மற்ற செலவிற்கு கூட பணம் இல்லை என்றும் லாரி உரிமையார்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களை கூறி சென்னையில் 650 மாநகர ஒப்பந்த தண்ணீர் லாரிகள் இயக்கப்படாது என டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் அறிவிப்பு செய்துள்ளது. இதனால் சென்னையில் வழக்கமாக நடைபெறும் தண்ணீர் விநியோகம் சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அல்லது ஒப்பந்தத்தை தொகையை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைப்பதாக கூறப்படுகிறது. எனவே அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ்மலர் மின்னிதழ்