கர்நாடக மாநிலத்தில் அவசர ஆம்புலன்ஸ் விமான சேவை தொடக்கம்!
நாட்டிலேயே கர்நாடகா மாநிலத்தில் முதல் முறையாக அவசர தேவைக்காக ஒருங்கிணைந்த விமான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழா பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டு, விமான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நோயாளிகளுக்கு மிகவும் நெருக்கடியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை வழங்கி உயிரை காப்பாற்றுவது மிக முக்கியமான பணி.
அந்த வகையில், இந்த ஒருங்கிணைந்த விமான ஆம்புலன்ஸ் சேவை அவசர நேரத்தில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸ் நெருக்கடி உள்ள இந்த காலகட்டத்தில் மருத்துவர்களின் சேவை அதிகமாக தேவைப்படும்.
எனவே, இந்த விமான ஆம்புலன்ஸ் சேவை முக்கி பங்கு வகிக்கும். கொரோனா நோயாளிகளை பாதுகாப்பான முறையில் அழைத்து செல்லவும் இந்த ஹெலிகாப்டரில் வசதி செய்யப்பட்டுள்ளது. என்றார்.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக விமான ஆம்புலன்ஸ் சிறப்பாக செயல்படும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்