5.3 பில்லியன் ஏர் போர்ஸ் ஒன் விமானம் சிறப்பம்சம்?
இன்னும் ஒரு சில வருடங்களில் ஏர் போர்ஸ் ஒன் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் புதிய விமானம் தயாராக உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்குத் தான் அந்த புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை முதலில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்க உள்ளது.கடந்த 1997ல் ஏர் போர்ஸ் ஒன் என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படம் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்துத் தான் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் இந்த ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இத்தனை சிறப்பம்சங்களா என அனைவரும் வியந்தனர்.
ஆனால் படத்தில் காண்பித்ததை விடப் பிரமாண்டமான வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன. அது பழைய கதை…… இன்னும் அதி நவீன வசதிகளுடன் 5.3 பில்லியன் டாலரில் புதிய ஏர்போர்ஸ் ஒன் விமானம் தயாரிக்கப்பட உள்ளது. அதில் யாருமே நினைத்துக் கூட பார்க்காத பல வசதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்