இலங்கை கடற்படையை தண்டிக்கப்பட வேண்டும் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்?

இலங்கை கடற்படையை தண்டிக்க கூடிய வகையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும், கண் துடைப்பு குழுக்களை ஏற்க முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவரிடம் இலங்கை கடற்படை கப்பல் மோதி 4 மீனவர்கள் கொல்லப்பட்டதாக சர்ச்சையாகி இருக்கும் நிகழ்வு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். “தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையை தண்டிக்கும் வகையில் குழு இருக்க வேண்டும்.

கண்துடைப்பு குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.

அரசியல் நிலவரம் பற்றி பேசியவர், “காங்கிரசுக்கு இனிமேல் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் எதிர்காலமும் இருக்காது. தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரசும் நிராகரிக்கப்பட்ட கட்சிகள். ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து ராயபுரம் தொகுதியில் போட்டியிடட்டும். ஐந்து முறை ராயபுரத்தில் வெற்றி பெற்றுள்ளேன். 6-வது முறையும் என்னையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.”

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்