நல்ல மருந்து ! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 12

 நம்ம நாட்டு (உணவு) மருந்து..!

நம்ம நாட்டு மருந்து…! (12)

ஜெர்மன் மருத்துவர் எலுமிச்சம் பழம் மாங்காய் உப்பு மிளகாய்த்தூள் என்றதும், எனது நாவிலே ஜலம் கூறியதை கண்டுபிடித்து அதற்கான காரணத்தை அவர் கூற ஆரம்பித்தார்…!

அவர் கூறியதாவது:- நண்பரே இந்த இடத்தில் எலுமிச்சம்பழமும் இல்லை, மாங்காயும் இல்லை, உப்பு மிளகாய்தூள் இல்லை, அப்படியிருக்க நான் கூறியதை மட்டும் உனது காதுகள் வழியாக உள்வாங்கி உடனே வாயில் உமிழ் நீர் எப்படி உற்பத்தியாகிறது இதுதான் நமது உடல் கூறின் அற்புதம்…!

அதுபோல் நல்ல சுவையான உணவை பார்த்தபோதே நமக்கு நாவில் ஜலம் ஊறும் அதாவது உமிழ்நீர் உற்பத்தியாகும்…

அத்துடன் சுவைத்து சாப்பிடும் போது அந்த உமிழ்நீர் என்ற உயிர்ச்சத்து நமது உடலுக்கு மிக மிகஅவசியமான பாதுகாப்பான ஒரு ஜீரண சக்தி அமிலம்.

உணவு உண்ணும் போது

 அந்த அற்புதமான உமிழ்நீர் அமிலம் தான் சிறப்பாக உற்பத்தியாக வேண்டும், அதைத் தவிர்த்து வேறு விதமான அமிலங்கள் உற்பத்தியாகி உணவுடன் அல்லது இந்த உமிழ்நீருடன் கலந்து உமிழ்நீரில் உள்ள உயிர்சக்தியை மாற்றி விட கூடாது.

நீங்கள் உணவை கவனிக்காமல் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பி அதாவது தொலைக்காட்சிப் பெட்டியில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது விதவிதமான உணர்வுக்குள் ஆட்படுகிறீர்கள்.

அப்போது ஒவ்வொரு உணர்வுக்கும், ஒருவிதமான அமிலத்தன்மை நமது உடலில் உருவாக தான் செய்கிறது.

உடனே நான் இடைமறித்து அது எப்படி உருவாகிறது என்று கேள்வியை கேட்டேன்..?

அதற்கு அவர் இப்போது தானே எலுமிச்சம்பழம், மாங்காய் என்றதும் உங்களுக்கு எச்சில் ஊறியது.

அதுபோல டி.வி., நிகழ்ச்சிகளில் நடக்கும் சம்பவங்களின் காட்சிகளை கண்களால் பார்க்கும் போது ஏற்படக்கூடிய உணர்வுகளின் மாற்றத்தால் உங்கள் உடல் உறுப்புகளிலும் சில மாறுதல்கள் கண்டிப்பாக நடைபெறும்.

 அதற்கேற்ப அமிலங்களும் சுரக்க தான் செய்யும் என்றார்.

உதாரணமாக கவர்ச்சி நடிகைகளின் நடனம், அல்லது படுக்கை அறைகளில் நடக்கும் செக்ஸ் காட்சிகளை பார்க்கும்போது.

உங்களுக்கு காம உணர்வு ஏற்படுமா…? ஏற்படாதா…? கடைசியில் வெட்கமாவது ஏற்படும் அல்லவா..?

அதுபோல்தான் அதிர்ச்சி திகில் காட்சிகள், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள், சோகமான கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள், உள்ளத்தை நெகிழ வைத்து உருக வைக்கும் விபரீத காட்சிகள். இப்படி நவரசங்களில் நமது நாபிக்கமலத்தில் நவ அமிலங்கள் சுரக்கத்தான் செய்கிறது.

இவைகள் நாம் உணவு உண்ணும் போது ஏற்படக்கூடிய உயிர்ச்சத்தான உமிழ் நீரின் தன்மையை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது.

 ஏன் உயிர்ச்சத்து உமிழ் நீரை கூட விஷமாக மாற்றிவிடக் கூடிய வலிமை பெற்றது, அவைகள் வயிற்றில் உள்ள உணவுகளை சரியாக வர ஜீரணமாகவிடாமல் செய்து வாய்வுகளை(கேஸ்) உண்டாக்கி வாயுத் தொல்லை’(Flatulence)   ஏற்பட்டு விடுகிறது.

(கற்றோர் நிறைந்த சபையாக இருந்தாலும் சரி, வில்லாதி வில்லர்கள் வீர புருஷர்கள் நிறைந்த சபையாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரையும் மூச்சுத்திணற….. மூக்கை பிடிக்க வைக்கும், ஆசன வாய்வு (கேஸ்) அலறல் வரலாறை அவர் சொல்லக் கேட்டு, எங்களால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து.. சிரித்து.. வயிறு வலியே வந்துவிட்டது அது ஒரு தனிக்கதை)

வாய்வு பிரச்சனை சிரிக்க வேண்டிய பிரச்சனை அல்ல..!

சிந்திக்க வேண்டிய பிரச்சனை.. என்றவர் தொடர்ந்து கூறியதை அடுத்த பதிவில் பார்க்கலாம்..!

எனவே நோய் வருமுன் காத்துக் கொள்ள வேண்டும். எதையும் வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைப்பது மடமை அல்லது முட்டாள்தனம் என்பதை உணர வேண்டும்.

நல்ல (உணவு) மருந்து…!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து..!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119