தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பில் தீ என்ற புதிய செயலியை அறிமுகம்!

மறைமலை நகர் பேருந்து நிலையத்தில் தீ என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய மறைமலைநகர் தீயணைப்பு துறையினர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பில் தீ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவு மற்றும் வட மேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சி அவர்களின் உத்தரவுப்படி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அலுவலர் ஜாஸ்மின் அவர்களின் உத்தரவின்படி அலுவலர் லோகநாதன் அவர்கள் தலைமையில் தீ செயலி பதிவிறக்கம் செய்வது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து காண்பிக்கப்பட்டது..

‌இந்த செயலியை பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அந்த செயலியில் உள்ள உதவி என்ற பட்டனை அழுத்தினால் அருகிலுள்ள தீயணைப்புத் துறையினருக்கு 5 வினாடிகளுக்குள் தகவல் சேர்ந்துவிடும்.

தீயணைப்பு துறையினர் அங்கு சென்ற தகவலின்படி உதவி கோரியவர் இருக்குமிடத்தை அவர்களுக்குத் தெளிவாக காண்பிப்பதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட ஏதுவாக இருக்கும் வகையில் இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மறைமலைநகர் தீயணைப்பு படையினர் சார்பில் மறைமலை நகர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் இந்த செயலியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தும் படியும் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்