சனி தரும் பலன்கள்

சனி தரும் பலன்கள்

சனி பகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கால புருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார்.
சனி பகவானுக்கு 3 , 7 , 10 இடப் பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

சனி பகவானின் தத்துவமே ஒருவர் நன்மையை செய்தால் அவருக்கு நன்மையையும், தீமையை செய்தால் அவருக்கு தீமையும் வழங்கும் பதவியை மட்டும் வகிக்கிறார் என்பதை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

சனி பெயர்ச்சியின் போது ஒருவரது
ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில்
சனிக்கிரக சஞ்சாரம்
இடம் பெறும்
காலம் நற்பலன்களை அளிப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனி இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும். மகரம் அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனியானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.

Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்