அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து?தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா காரணமாக குடியரசு தின விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாவட்டம் தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும், குடியரசு தினவிழாவை பார்க்க மக்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ் மலர் மின்னிதழ்