விவசாயிகளுக்கு 15நாட்களில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை.

15 நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று yவேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்

சென்னை,

நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு இதுவரை ரூ.575 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

15 நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  பருவம் தவறிய மழையால் பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கைகொடுப்பதில் தேர்தலோ, அரசியலோ குறுக்கிடாது; நிச்சயம் அரசு உதவும். 

பருவம் தவறிய மழையால் 10 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.510 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

செய்தியாளர் ரஹ்மான்