நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -11

நாட்டு மருந்து: நல்ல மருந்து…!

 நம்ம நாட்டு மருந்து…! (11)

கடந்த (10) பதிவில் உலக மருத்துவர்கள் கலந்துரையாடல் பற்றி பார்க்கலாம் என்று கூறியிருந்தேன

மருத்துவ நிபுணர்களின் விவாதத்தில் இன்றைய தேதியில் (1994) இருந்து எதிர்வரும் 25 ஆண்டுகளில் அதாவது 2019 -களில் தமிழகத்தில் வரக்கூடிய நோய்கள் என்று பட்டியலிட்டு அதில் மிக முக்கியமான நோய்கள்….

இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள், மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, கருச்சிதைவு, பெண்மை, ஆண்மை மலட்டுத்தன்மை மற்றும் இது சார்ந்த சிறுசிறு வியாதிகளையும் பட்டியலிட்டு காட்டினார்கள்.

அவர்கள் விவாதித்த அந்த விவாதம் என்னை வேறு மாதிரி சிந்திக்க வைத்த காரணத்தால் இது பற்றி எனது எடிட்டரிடம் தகவல் தந்தேன்.

 அவரும் அதைப் பற்றி யோசனை செய்துவிட்டு.

 எதிர்கால நோய்களைப் பற்றி பேசிய  முக்கியமான நபரிடம் எப்படியாவது ஒரு பேட்டி எடுத்து வாருங்கள் என்று எனது எடிட்டர் கூறிவிட்டார்.

நாம் பல சிரமங்களுக்கிடையே ஜெர்மனியைச் சேர்ந்த அந்த மருத்துவரை பிடித்து ஒரு பத்து நிமிடம் பேசிப் பார்த்தோம்.

அப்போது அவர் நம்மிடம் பேசிய போது அவர் கூறியதாவது ஐயா தமிழர்களாகிய நீங்கள்.

உங்கள் உணவு உண்ணும் முறையையும், உங்கள் உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு வருகிறீர்கள்.

எனவே தான் இதுபோன்ற பல நோய்கள் வருவதற்கான காரணிகளாக நாங்கள் எங்கள் ஆய்வில் எடுத்துக் கொள்கிறோம்.

உதாரணமாக தரையில் அமர்ந்து சாப்பிட்டு வந்த தமிழர்களாகிய நீங்கள்…! தற்போது மேஜை மீது உணவுகளை வைத்து நாற்காலியில் அமர்ந்து கால்களை தொங்கப் போட்டுக் கொண்டு சாப்பிடும் முறையும், அதிலும் முக்கியமாக தொலைக்காட்சி பெட்டியில்.. டிவி  பார்த்துக் கொண்டே சாப்பிடுவது தான் மிகவும் ஆபத்தானது என்று ஆணித்தரமாகக் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது 1980களில் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வந்துவிட்டாலும்.

 தற்போது (1993-94) வந்திருக்கும் தனியார் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்து வரும் நிகழ்ச்சிகளே உங்கள் உடல் நல ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய வாய்ப்புகளை அதிகம் உருவாக்கித் தருகிறது என்றார்.

தொடர்ந்து தொலைக்காட்சியில் சீரியல் எனும் நெடுந்தொடரில் விசித்திரமான, வினோதமான கதைகளைக் கொண்ட நாடகங்கள் மற்றும் சினிமாக்கள் போன்ற நிகழ்வுகளை….! உணவு உண்ணும் போது பார்த்துக் கொண்டே சாப்பிடுவதால் இது போன்ற விபரீதங்கள் ஏற்படும் என்றார் அந்த மருத்துவர்…!

அப்போது நாம் அவரை இடைமறித்து… அது எப்படி…? விபரீதமாக கருதுகிறீர்கள் என்று கேட்டோம்.

 அதற்கு அவர் நம்மிடம் ஒரு கேள்வியை கேட்டார்.

நீங்கள் எலுமிச்சம் பழத்தில் உப்பு தேயத்து, நாக்கில் நக்கி அல்லது தேய்த்து சுவைத்துப் பார்த்தது உண்டா..?

அல்லது புளிப்பான மாங்காயை உப்பு மிளகாய்த்தூள் இரண்டையும் கலந்து அதில் தேய்த்து நாக்கில் நக்கி சுவைத்ததுண்டா….?

கடித்து சாப்பிட்டதுண்டா…?

அதற்கு நான் கண்டிப்பாக சாப்பிட்டது உண்டு, சிறுவயதில் பள்ளி செல்லும் பருவத்தில் என்றேன்…!

மருத்துவர்:-இப்போது எப்படி இருக்கிறது…?

நான்:- இப்போது ஒன்றும் இல்லையே…!!!

மருத்துவர்:- நான் கேட்பது உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். அதாவது நான் சொன்னதை கேட்டவுடன் உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.

நான்:- ஒரு உணர்வும் எனக்கு ஏற்படவில்லையே…?

மருத்துவர்:- பொய்…!

 பொய் சொல்லாதீர்கள்.

உங்களுக்கு உங்கள் வாயில் உமிழ்நீர் (எச்சில்) சுரக்க வில்லையா…?

நான் உங்கள் தொண்டையை கவனித்தேன் நீங்கள் மிடறு விழுங்கியது உண்மைதானே…?

உண்மையிலேயே எனக்கு எலுமிச்சம்பழம்..! மாங்காய்…!என்றதுமே வாயில் உமிழ்நீர் (எச்சில்) சுரக்க தொடங்கியது அதை விழுங்கியதும் உண்மைதான்.

 ஆனால் நான் அவரிடம் பொய் சொல்லியதை…‌ அவர் கண்டு பிடித்து விட்டார்.

 பின்னர் நான் எச்சில் விழுங்கிய உண்மையை ஒத்துக்கொண்டேன் அதைத் தொடர்ந்து அவர் என்னிடம் பேசியபோது…….!

அவர் பேசியதை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம் காரணம்..!

பதிவுகள் நீண்டதாக இருந்தால் எவரும் படிப்பதில்லை என்கின்ற காரணத்தால் இதன் தொடர் பதிவை அடுத்து பார்ப்போம்.. நன்றி

 எதையும் வருமுன் காப்போம்

நல்ல ( உணவு )மருந்து…!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

 தொகுப்பு:- சங்கரமூர்த்தி…

 73 73 14 11 19