தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி-2 கூடுவதாக அறிவிப்பு?
தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2ஆம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும். ஆளுநர் உரைக்கு பிறகு சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது.
முதல் நாள் மறைந்த எம்எல்ஏ-க்களுக்கு இரங்கல் தீர்மானம் நடைபெற்ற நிலையில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.